2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பசுவை திருடி இறைச்சியாக்கியவருக்கு விளக்கமறியலில்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 28 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


நீர்வேலி வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பசுவொன்றைக் களவாடிச் சென்று அதனை இறைச்சாக்கியவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பஷPர் மொஹமட் உத்தரவிட்டார்.

நீர்வேலி வடக்கினைச் சேர்ந்த பண்ணையாளர் ஒருவரின் பசுவொன்று கடந்த சனிக்கிழமை (25) இரவு திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்தார்.  
இந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட அச்சுவேலி பொலிஸார், அச்சுவேலி, புலசிட்டி பகுதியினைச் சேர்ந்த சந்தேகநபரை நேற்று முன்தினம் (26) கைது கைது செய்து விசாரணைகளை நடத்தினர்.

இதன்போது, தான் திருடிய பசுவை இறைச்சியாக்கியதாக குறிப்பிட்டுள்ள சந்தேகநபர், அதன் எஞ்சிய பாகங்களை வைத்திருந்த இடத்தினையும் அடையாளப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து மேற்படி நபரை மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் நேற்று (27) ஆஜர்ப்படுத்தியதை அடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .