2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடமாகாண நீதிபதிகளுக்கான செயலமர்வு

Kogilavani   / 2014 ஜனவரி 30 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


வடமாகாண நீதிபதிகளுக்கான ஒரு நாள் செயலமர்வு யாழ்.நீதிமன்றக் கட்டிடத்தில் இன்று (30) காலை 10 மணிக்கு ஆரம்பமானது. 

இந்தச் செயலமர்விற்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், அமெரிக்காவிலிருந்து வருகை தந்த நீதிபதி ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு விளக்கவுரைகளை வழங்கி வருகின்றனர்.

இதில் 'சட்டமும் வழக்கு நடைமுறைகளும்' பற்றி நீதிபதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இச்செயலமர்வில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 9 நீதிபதிகள் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .