2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

லொறிகளில் மதுபானம் கொண்டுசென்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 31 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் ஏற்றிச்சென்ற 02  லொறிகளின் சாரதிகளை நேற்று வியாழக்கிழமை கைதுசெய்ததுடன், இவர்களிடமிருந்து   693,525 ரூபா பெறுமதியான 6,497 மதுபானப் போத்தல்களையும் கைப்பற்றியதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெ.எ.எஸ்.எம்.கே.ஜெயசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து அச்சுவேலியிலுள்ள மதுபான நிலையத்திற்கு வந்த இந்த லொறிகளை  போக்குவரத்து கடமையிலிருந்த  பொலிஸார் சோதனையிட்டனர். இதன்போது, அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் ஏற்றி வந்தமை தெரியவந்தது எனவும் அவர் கூறினார்.

மதுபானத்துடன் சந்தேக நபர்களை  மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .