2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

உடுவில் கல்விக் கோட்ட கல்விப் பணிப்பாளராக தில்லைநாதன் தர்மலிங்கம் நியமனம்

A.P.Mathan   / 2014 ஜனவரி 31 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -நா.நவரத்தினராசா
 
வடமாகாண கல்வித்திணைக்களத்தில் கடமையாற்றிய தில்லைநாதன் தர்மலிங்கம் யாழ். உடுவில் கல்விக் கோட்ட கல்விப் பணிப்பாளராக கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை நியமனம் பெற்றுள்ளார் என வலிகாமம் கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வரட்ணம் சந்திரராசா இன்று (31) தெரிவித்தார்.
 
இரு தடவைகள் நேர்முகத்தேர்வுகள் நடைபெற்றும் கல்விக் கோட்டப் பணிப்பாளர்களுக்கு உரிய தகைமை இல்லாத காரணத்தினால் கடந்த ஒன்றரை வருடங்களாக இப்பதவி வெற்றிடம் பூர்த்தி செய்யப்படாமல் பதில் கல்விப் பணிப்பாளருடன் இயங்கி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .