2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சர்வதேசத்தின் மத்தியில் விசாரணை வேண்டும்: பிஸ்வாலிடம் யாழ்.ஆயர் எடுத்துரைப்பு

Kanagaraj   / 2014 பெப்ரவரி 01 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இலங்கையில் இறுதிப்போரின் போது நடைபெற்ற போர்ககுற்றங்கள் மற்றும் காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகள் உள்நாட்டில் இல்லாமல் வெளிநாட்டில் நடத்தப்படுவதையே மக்கள் நம்புவார்கள் என தெற்கு-மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலிடம் எடுத்துரைத்ததாக யாழ்.மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் தெரிவித்தார்.

தெற்கு-மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இன்று (01) யாழிற்கு விஜயம் மேற்கொண்டு யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையினையினை ஆயர் இல்லத்தில் இன்று காலை 9 மணிக்குச் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக யாழ்.மறை மாவட்ட ஆயர் கருத்துத் தெரிவிக்கையில்,

இறுதிப்போர் பற்றிய நம்பகத்தகுந்த விசாரணை வெளிநாடுகளின் மத்தியில் நடத்தப்பட வேண்டும் அப்போதே எவ்வளவு பேர் காணாமற் போனார்கள் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய விபரங்கள் வெளிவரும். இதன் மூலமே பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான இழப்பீடுகள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

'இனங்களுக்கிடையிலான நல்லிணகத்தினை ஏற்படுத்துவதன் மூலமே பிரச்சினைகளை தீர்க்க முடியும், நீங்கள் அவ்வாறான முயற்சிகள் எடுக்கப்படவில்லையா என விஸ்வால் என்னிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு 'விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து இங்கிருக்கும் பிரச்சினைகளை முடித்துவிட்டோம் என அரசாங்கம் வெற்றிப் பெருமிதத்துடன் இருக்கின்றதே தவிர இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கோ அல்லது சமாதானத்தினை இலங்கையில் கொண்டு வருவதற்கோ அரசாங்கம் எதனையும் செய்யவில்லையெனத் நான் தெரிவித்தேன்.

காணாமற்போனார் தொடர்பாக அவர்களின் உறவினர்கள் மன அழுத்தத்தில் இருக்கின்றர். அதற்கு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட வேண்டும். அது நிச்சயமாக உள்நாட்டில் இல்லாமல் வெளிநாட்டில் நடத்தப்படவேண்டும் என வலியுத்திக் கூறினேன்.

அவர்களின் வருகை ஜெனீவாக் கூட்டத் தொடர்பாகவும் அதற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவும் அமைந்திருந்தது. அந்த வகையில் அவர்கள் எங்கள் பிரச்சினைகள் தொடர்பில் உள்நாட்டு அரசாங்கத்தின் மூலம் சரியான தீர்வு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக ஆஜர் மேலும் தெரிவித்தார்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .