2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

Super User   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கான விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (01) இடம்பெற்றது.

இதில் உற்பத்தித்திறன்; ஊக்குவிப்பு அபிவிருத்தி அமைச்ரும் கல்குடா தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான பஷீர் சேகுதாவூத், பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்திற்கு 08 மில்லின் ரூபாவும், திவிநெகும வேலைத்திட்டத்திற்கு 03.65 மில்லியன் ரூபாவும் கிராமிய பாலம் மற்றும் வீதிகளுக்கு 05.48 மில்லின் ரூபாவும் பாடசாலைகள் மற்றும் சுகாதாரத்திற்கு 01.1 மில்லியன் ரூபாவுமாக மொத்தம் 18.22 மில்லின் ரூபாவுக்கான வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டு அது தொடர்பாக ஆரயப்பட்டதாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .