2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கடலாமையினை இறைச்சியாக்கியவர் கைது

Super User   / 2014 பெப்ரவரி 04 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

யாழ். மருதங்கேணி வத்திராயன் பகுதியில் 15 கிலோ கடலாமையை இறைச்சியாக்கிக் கொண்டிருந்த அதேயிடத்தினை சேர்ந்த கந்தையா மனோகரன் (45) இன்று நண்பகல் கைது செய்துள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர் கடலாமை ஒன்றினை இறைச்சியாக்கிக் கொண்டிருக்கின்றார் என பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் கிடைத்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற பருத்தித்துறை பொலிஸார் குறித்த நபரை கைது செய்யததுடன் கடலாமையின் இறைச்சியும் கைப்பற்றியுள்ளதாக அவவர்கள் தெரிவித்தனர். தற்போது குறித்த நபரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, கிளிநொச்சியில் காட்டுப் பன்றி இறைச்சி வைத்திருந்த நபர் ஒருவருக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.விஜயராணி நேற்று 5,000 ரூபா தண்டம் விதித்துள்ளார்.

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் 1 கிலோ 950 கிராம் காட்டுப்பன்றி இறைச்சியினை கொண்டுசென்ற  வயோதிபர் ஒருவரை கடந்த புதன்கிழமை கைது செய்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து மேற்படி நபரினை நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே பதில் நீதவான் தண்டம் விதித்தார் என கிளிநொச்சி பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .