2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அலுவலகத்தைவிட்டு வெளியேற்றிய பெண்ணின் கைப்பை அபகரிப்பு

Kanagaraj   / 2014 பெப்ரவரி 05 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பெண் அலுவலர் கடமையினை முடித்து வெளியில் வந்தவேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரது கைப்பையினை அபகரித்துச் சென்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

பெண்ணின் கைப்பையில் ஒரு தொகைப்பணம், அடையாளஅட்டை, மற்றும் இதர ஆவணங்கள் இருந்ததாக அந்தப்  முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று  பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், உடுவில் பிரதேச செயலகத்தில் கடந்த வாரமும்  மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் அங்கு பணியாற்றும் பெண்ணொருவரின் பணப்பை இதேமாதிரியாக பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .