2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வாள்வெட்டில் இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.  புங்குடுதீவு   பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில்   இடம்பெற்ற  வாள்வெட்டில் படுகாயமடைந்த இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

புங்குடுதீவு முதலாம் குறுக்கைச் சேர்ந்த எஸ்.கஜயா (வயது 24), பத்தாம் குறுக்கைச் சேர்ந்த சந்திரகாந்தன் (வயது 27) என்பவர்களே படுகாயமடைந்துள்ளனர்.

இவர்களுக்கு இடையில் புதன்கிழமை (05) இரவு ஏற்பட்ட  முரண்பாடு கைகலப்பாக மாறியதாகவும் பொலிஸார் கூறினர். 

இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும்   வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .