2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பொறியியல் பீட அங்குரார்ப்பணம்

Super User   / 2014 பெப்ரவரி 06 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.றொசான்

கிளிநொச்சி அறிவியல் நகரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரசரட்ணம், யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதய பெரேரா, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பொறியியல் பீடம், உயர் கல்வி அமைச்சின் 1.54 பில்லியன் ரூபா நிதியில் கிளிநொச்சி அறிவியல் நகரத்தில் 4 கட்டிடங்களைக் கொண்டதாகவும் மாணவர்களுக்கான தங்குமிட விடுதிகளையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது என உப வேந்தர் தெரிவித்தார்.

இதில் முதலாம் வருடத்தில் 50 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதுடன், பொறியியற் பீடத்தின் முதலாவது பீடாதிபதியாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பீடாதிபதி டாக்டர் அற்புதராஜா கடமையாற்றவுள்ளதாக உப வேந்தர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .