2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கதவு, யன்னலை திருடியவர் கைது

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். ஸ்ரான்லி வீதியிலுள்ள வீடொன்றின் 186,000 ரூபா பெறுமதியான கதவு மற்றும் யன்னலை திருடியதாகக் கூறப்படும் ஒருவரை வியாழக்கிழமை (06) கைதுசெய்ததுடன்,  கதவு மற்றும்  யன்னலை கைப்பற்றியதாகவும்  யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.எ.எல்.விக்கிரமரராட்சி தெரிவித்தார்.

குறித்த வீட்டிலுள்ளவர்கள் புதன்கிழமை (05) இரவு வெளியில் சென்றிருந்தபோது, வீட்டின் கதவு மற்றும் யன்னல் திருடப்பட்டதாக வீட்டு உரிமையாளர்; வியாழக்கிழமை  (06)  முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.

இவரை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .