2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஐவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 10 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, சுமித்தி தங்கராசா, ஐ.நேசமணி

யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான 9பேரில் ஐவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய நால்வரையும் விடுவிக்கும்படியும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பஷீர் மொஹமட் உத்தரவிட்டார்.

அத்துடன். விடுவிக்கப்பட்ட நால்வரும் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் நீதவான் பணிப்புரை விடுத்ததாகப் வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸின் விசேட பொலிஸ் குழு, மூளாயில் கடந்த புதன்கிழமை (05) இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை வட்டுக்கோட்டைப் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணைகளின் படி சங்கானையில் வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றினைப் பின்தொடர்ந்து வந்த பொலிஸார் கொக்குவில் தலையாழிப் பகுதியிலுள்ள ஆலய மடமொன்றில் வாள்கள், இராணுவ சீருடையுடன் இருந்த ஐவரை நேற்று (08) கைது செய்தனர்.

பிடிபட்டவர்களின் கைத்தொலைபேசியிலிருந்த தொலைபேசி இலக்கங்களைக் கொண்டு மேலும் நால்வரை இன்று (09) கொக்குவில் பகுதியில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் கொக்குவில், தலையாழி, கேணியடி, மற்றும் பிடாரியம்மன் கோயிலடி ஆகிய பகுதிகளினைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், வாள்கள், பொல்லுகள், செயின்கள், இரும்புக்கம்பி ஆகியவற்றினைக் கைப்பற்றியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இன்று (09) பிற்பகல் இவர்களை மல்லாகம் நீதிமன்ற பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .