2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதானவர் விடுதலை

Kanagaraj   / 2014 மார்ச் 22 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நபரை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் நேற்று  (21) விடுதலை செய்தார்.

குறித்த வழக்கு மேல்நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, வல்லிபுரம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தவராசா கஜேந்திரன் (வயது 33) என்ற நபரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் கடந்த 2006, 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தின் முன்னரங்க காவலரண்கள் மீது தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில், 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி ஓமந்தை பகுதியில் வைத்து பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால், கடந்த 2013 ஜனவரி மாதம் யாழ். மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட போது, இவரால் அளிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கடந்த ஜனவரி 31 ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றினால் நிராகரிப்பட்டதை தொடர்ந்து, இவருக்கு எதிரான வேறு சான்றுகள் உள்ளனவா என பரிசீலனை மேற்கொள்வதற்காக மேற்படி வழக்கு  வெள்ளிக்கிழமை (21) வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து மேற்படி வழக்கு நேற்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரச சட்டத்தரணி குறித்த நபருக்கு எதிராக வேறு சான்றுகள் இல்லையென மன்றில் தெரிவித்ததினையடுத்து நீதிபதி குறித்த நபரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .