2021 மே 08, சனிக்கிழமை

இளவாலை கன்னியர்மட பாடசாலை கட்டிடம் இடிந்தது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 23 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

–நா.நவரத்தினராசா
 
யாழ். வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட இளவாலை கன்னியர்மட பாடசாலையின் பழமை வாய்ந்த கட்டிடமொன்று சனிக்கிழமை (22) இடிந்து வீழ்ந்ததாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். 

எனினும், நேற்றையதினம் பாடசாலை விடுமுறை  என்பதால் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.
சுமார் 50 அடி நீளமான மிகவும் பழமையான கட்டிடம் ஒன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.
 
இது தொடர்பாக வலயக் கல்வி அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதுடன், கட்டிடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X