2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மோடியின் பதவியேற்பு விழாவில் யாழ். மேயர், தொண்டமான் பங்கேற்பு

Menaka Mookandi   / 2014 மே 25 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் 14ஆவது பிரதமராகப் பதிவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் தானும் பங்கேற்கவுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா – தமிழ்மிரருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து சனிக்கிழமை (24) இரவு வந்த அழைப்பினை ஏற்று, தான் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதியின் இந்த இந்திய விஜயத்தில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் பங்கேற்கவுள்ளார் என இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் அறிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமராக, நரேந்திர மோடி நாளை(26) மாலை பதவியேற்கவுள்ளார். இந்த நிகழ்வுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், இலங்கை சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார்.

இதற்காக இன்று (25) மாலை, ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இந்தியா பயணமாகவுள்ளனர்.

இந்த இந்திய விஜயத்தில் பங்கேற்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, வெளிவிவகார அமைச்சரினூடாக ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த போதிலும் அந்த அழைப்பை முதலமைச்சர் விக்னேஷ்வரன் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .