2025 ஜூன் 30, திங்கட்கிழமை

யாழில் சிறிய ரக விமானம் மீட்பு

Kogilavani   / 2014 ஜூன் 03 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த் 


யாழ். நகரில் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றின் கூரையிலிருந்து  சிறிய ரக விமானம் ஒன்று திங்கட்கிழமை(02) மாலை மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதியின் மேற்கூரையில் சிறிய ரக விமானம் ஒன்று இருப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலே குறித்த விமானத்தினை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விமானம் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்ததுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X