2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சமூக பராமரிப்பு நிலையங்கள் தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 08 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன் 

வடமாகாணத்திலுள்ள பிரதேச செயலகங்களுடன் இணைந்ததாக செயற்படும் சமூக பராமரிப்பு நிலையங்கள் தொடர்பான செயலமர்வு யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் நடைபெறவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.டி.உடவத்த சனிக்கிழமை (07) தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் திங்கட்கிழமையும் (16) கிளிநொச்சியில்  செவ்வாய்க்கிழமையும் (17) மாவட்டச் செயலக மகாநாட்டு மண்டபங்களில் காலை 9 மணி முதல் 4 மணிவரையும் செயலமர்வுகள் நடைபெறவுள்ளன.

வடமாகாணத்தில் 27 பிரதேச செயலக பிரிவுகளில் சமூக பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு அவை சிறப்பாக இயங்கி வருகின்றன. அவற்றின் செயற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பாகவே இந்தச் செயலமர்வு நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், வடமாகாணத்தில் சமூக பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்படாத மிகுதி 6 பிரதேச செயலகங்களிலும் மிகவிரைவில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

நலிவுற்ற மக்களுக்கு சமூக சேவைகள் ஒரேயிடத்தில் கிடைக்கவேண்டுமென்ற நவீன கருத்திற்கு அமைய நாட்டிலுள்ள பிரதேச செயலகங்களின் வளாகத்தில் 2007ஆம் ஆண்டு முதல் சமூக பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையத்தில் சமூக சேவைகள் அலுவலர், சிறுவர் நன்னடத்தை அலுவலர், உளவள அலுவலர், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர், பெண்கள் அபிவிருத்தி அலுவலர், ஆகியோர் ஒன்றிணைந்து நலிவுற்ற மக்களுக்குரிய சேவைகளை வழங்கி வருகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
 
 
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .