2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பார்த்தீனியம் கொள்வனவு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 10 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ பார்த்தீனியச் செடி 10 ரூபா என்ற ரீதியில், வடமாகாண விவசாய அமைச்சால் நாளை புதன்கிழமையிலிருந்து தொடர்ந்து 07 நாட்களுக்கு (11)  கொள்வனவு செய்யப்படவுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சு செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தது.

பார்த்தீனியச் செடி அழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்தக் கொள்வனவுத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

புத்தூர், சிறுப்பிட்டி மேற்கு, அச்செழு, அச்சுவேலி மேற்கு வசாவிளான், ஏழாலை, வட்டுக்கோட்டை, கைதடி கிழக்கு, கோண்டாவில், மாதகல், உடுப்பிட்டி, வல்லை நாச்சந்தி ஆகிய இடங்களில் வளர்ந்துள்ள பார்த்தீனியச் செடிகளை பிடுங்கி   உரப்பைகளில் இட்டு அந்தந்த இடங்களில் அமைக்கப்படும் கொள்வனவு நிலையங்களில் கையளிக்க முடியும் எனவும் வடமாகாண விவசாய அமைச்சு தெரிவித்தது.

இவ்வாறு கொள்வனவு செய்யப்படும்போது பார்த்தீனியச் செடிகளுக்குள் ஏனைய  செடிகள் இருக்கலாகாது என்பதுடன்,  பார்த்தீனியச் செடி கொண்டுவரப்படும் உரப்பைகளுக்குப் பதிலாக மாற்று உரப்பைகள் வழங்கப்படும் எனவும்  வடமாகாண விவசாய அமைச்சு கூறியது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .