2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நடமாடும் சேவை

Kanagaraj   / 2014 ஜூன் 16 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


உள்ளூராட்சி வார நிகழ்வுகளை முன்னிட்டு சாவகச்சேரி நகரசபையின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை முகாம்கள் இன்று திங்கட்கிழமை (16) முதல் நடத்தப்பட்டு வருவதாக நகரசபை தவிசாளர் இ.தேவசகாயம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

சோலை வரி அறவிடுதல், துவிச்சக்கரவண்டிகளுக்கு இலக்கத்தகடு வழங்குதல், மருத்துவமுகாம் உள்ளிட்ட சேவைகள் இந்த நடமாடும் சேவையில் வழங்கப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக திங்கட்கிழமை (16) நகராட்சிக்குட்பட்ட கோயிற்குடியிருப்புப் பகுதியில் இந்த நடமாடும் சேவை இடம்பெற்றதுடன், தொடர்;ந்து வரும் நாட்களில் ஏனைய இடங்களிலும் நடைபெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .