2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இந்திய வியாபாரிகள் இருவர் கைது

Kanagaraj   / 2014 ஜூலை 07 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இரண்டு இந்திய வியாபாரிகளை நாவாந்துறைப் பகுதியில் வைத்து இன்று திங்கட்கிழமை (07) கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட இவ்விருவரும் கணவன் மற்றும் மனைவி என பொலிஸார் தெரிவித்தனர். தமிழகம் மதுரையைச் சேர்ந்த சுப்பையா இராமராஜா (45), இராமராஜா சுவலக்ஸ்மி (40) ஆகிய கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து இரண்டு பொதிகளில் புடவைகள் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .