2025 ஜூலை 05, சனிக்கிழமை

மொட்டையடிக்கப்பட்டு தாக்குதல்

Kogilavani   / 2014 ஜூலை 08 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.உடுப்பிட்டி இமையாணன் பகுதியினைச் சோர்ந்த செல்வராசா தினேஷ் (24) என்பவர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளாகி திங்கட்கிழமை (07) மாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்தனர்.

மேற்படி நபர் மதுபானசாலையில் மது அருந்திக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சிலர் மேற்படி நபரைத் தூக்கிச் சென்று பருத்தித்துறைக் கடற்கரையில் வைத்து அவருக்கு மொட்டை அடித்துள்ளனர்.

தொடர்ந்து அவரை சவரக்கத்தியினால் வெட்டியதுடன், தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .