2025 ஜூலை 05, சனிக்கிழமை

பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன

Kogilavani   / 2014 ஜூலை 11 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- யோ.வித்தியா, பொ.சோபிகா

யாழ்.மாவட்டத்தில் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாகவும், இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான சம்பவங்களில் ஈடுபடவேண்டாம் எனவும் யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார்.

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொலிஸ் தலைமையகத்தில் மாதத்திற்கான முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வட்டிக்குப் பணம் கொடுத்து ஏமாறுதல், சீட்டுப் பிடிப்பவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுதல், வெளிநாடு செல்வதற்காக பணம் கொடுத்து ஏமாறுதல் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.

இவை தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

அண்மையில் அவுஸ்திரேலியக் குடியரசுத் தலைவர் கூட, இலங்கையர்கள் எவரையும் தாம் நாட்டிற்குள் அனுமதிக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

ஆகவே, அவுஸ்திரேலியப் பயணத்திற்காகவும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .