2025 ஜூலை 05, சனிக்கிழமை

வடமாகாணத்திற்கு வாழ்வின் எழுச்சி அவசியம்: டக்லஸ்

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


வாழ்வின் எழுச்சி திட்டம் என்பது யாழ்.மாவட்டத்திற்கு மட்டுமல்லாது வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கும் அவசியமானது என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (11) இரண்டாம் நாளாக இடம்பெற்ற வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்திற்கு, உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட தலைவர்களுக்கான செயலமர்வில் இடம்பெற்றது. அங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகைiயில்,

மஹிந்த சிந்தனை என்பது இயங்கியல் தன்மை கொண்டது. இது குறிப்பிட்டதொரு பகுதிக்கு மட்டுமல்லாது நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு செயற்திட்டமாகும்.

ஆனால், சிலர் அவர்களது சுயலாபத்திற்காக இதனை தவறான வழிமுறைகளில் பயன்படுத்தலாம் என்பதனால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தவறுகள் என்பது தவறாக வழிநடத்தும் அரசியல் தலைவர்களையே சாரும்.

எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தென்னிலங்கை அரசியல் வாதிகள் தயாராக இருக்கின்ற போதிலும் எமது தவறான அரசியல் தலைமைகள் தயாராக இல்லை.

அபிவிருத்திகள் எமது மக்களின் நலன்களுக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்டால் அதற்கு நாம் ஒருபோதும் துணைநிற்க மாட்டோம். அவ்வாறு தவறுகள் ஏற்படும் இடத்து அவற்றை சீர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க நான் தயாராக இருக்கின்றேன்.

இங்குள்ள காலநிலைக்கு ஏற்ப பழ மரம் மற்றும் பயன்தரு மரக்கன்றுகள், விதை தானியங்களை நடுகை செய்வதற்கும் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனடிப்படையில் எமது மக்களின் தேவைகளை இனம்கண்டு அவற்றுக்குத் தீர்வு காண்பதே எமது நோக்காக இருக்க வேண்டுமென்பதை கருத்தில் கொண்டு, இதற்கு ஏற்ற வகையில் இவ் வேலைத்திட்டங்களை முழுமைப்படுத்தும் வகையில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் முன்மாதிரியானதாகவும் அர்த்தபூர்வமானதாகவும் தமது பணிகளை உணர்ந்து முன்னெடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

வாழ்வின் எழுச்சி திட்டம் தொடர்பான விளக்கவுரையினை மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நிகழ்த்தினார்.

இதன்போது வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் குமாரசிறி, வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர், ஈ.பி.டி.பியின் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, மாகாண சமூர்த்தி உதவி ஆணையாளர் மகேஸ்வரன், அமைச்சரின் ஆலோசகர் சுந்தரம் டிவகலால, ஆகியோருடன் பிரதேச செயலர்கள், வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்;பிள்ளை, யாழ்.மாநகர முதல்வர் திருமதி. யோகேஸ்வரி பற்குணராசா உட்பட துறைசார்ந்த பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .