2025 ஜூலை 05, சனிக்கிழமை

மாபெரும் போராட்டம்

Kanagaraj   / 2014 ஜூலை 12 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ராஜ்குமார்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்கிழமை 15ஆம் திகதி யாழ். பேருந்து நிலையத்தில் காலை 10.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய மீனவ ஒத்தழைப்பின் அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப் போராட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த நிலங்களில் குடியேற்ற வேண்டும், அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் காணிக்கொள்ளையை நிறுத்த வேண்டும், இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும், வடக்கு கிழக்கில் சிவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், மண்ணெண்ணை விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் மானியம் கிடைப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைள் முன்வைக்கப்படவுள்ளன.

மேலும், சாத்வீகப்போராட்டங்கள் நிகழும் போது இராணுவத்தினர் மற்றும் புலனாய்வுத்துறையினர் இடையூறு செய்வதை உடன் நிறுத்த வேண்டும், போரின் போது சரணடைந்தவர்களை மீள ஒப்படைக்க வேண்டும், கைது செய்யப்பட்ட கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும் போன்ற மேலதிக கோரிக்கைகளையும் முன்வைத்து முன்னெடுக்கும் மாபெரும் போராட்டத்திற்கு எமது முற்போக்கு தமிழ் தேசிய கட்சி  சார்பாக பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதற்கு நாம் விரும்புகின்றோம் என்பதனை அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .