2025 ஜூலை 05, சனிக்கிழமை

துவிச்சக்கரவண்டிகளைத் திருடி நபர் கைது

Kogilavani   / 2014 ஜூலை 13 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ்.மாவட்டத்தின் இளவாலை, சுன்னாகம் மற்றும் அச்சுவேலி ஆகிய பொலிஸ் பிரிவுகளிற்குட்பட்ட பகுதிகளில் துவிச்சக்கரவண்டிகளைத் திருடியதாக கூறப்படும் நபரை சனிக்கிழமை (12) மாலை கைதுசெய்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலைய உபபொலிஸ் பரிசோதகர் டி.ஹகவத்துர ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தார்.

சுன்னாகம் சூரவரத்தையினைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 9  துவிச்சக்கரவண்டிகளை மீட்டுள்ளதாகப் பரிசோதகர் தெரிவித்தார்.

சூரவரத்தைப் பகுதியிலுள்ள துவிச்சக்கரவண்டி திருத்தும் நிலையத்தில், திருட்டுத் துவிச்சக்கரவண்டியொன்றினை விற்பனை செய்துகொண்டிருக்கும்போதே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி நபர் திருடிய துவிச்சக்கரவண்டிகளில் பலதை விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்ததாகப் உபபரிசோதகர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .