2025 ஜூலை 05, சனிக்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் கைது

Kogilavani   / 2014 ஜூலை 13 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


நீதிமன்றத்தினால் சாரதி அனுமதிப்பத்திரம் தடை செய்யப்பட்டு வைத்திருந்த காலத்தில் மீண்டும் மதுபோதையில் முச்சக்கரவண்டியினைச் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய நபரை ஆவரங்கால் சந்தியில் வைத்து சனிக்கிழமை (12) கைதுசெய்ததாக அச்சுவேலிப் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தனர்.

வவுனியாவினைச் சேர்ந்த மேற்படி நபர், செலுத்தி வந்த முச்சக்கரவண்டியினையும் கைப்பற்றிப் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

“மேற்படி நபர், மதுபோதையில் வாகனம் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில், கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வாதாரவத்தையில் வைத்து அச்சுவேலிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

தொடர்ந்து, மறுநாள் 4 ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையில், நீதவான் மேற்படி நபருக்கு 7500 தண்டம் விதித்ததுடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தினையும் 3 மாத காலப்பகுதிக்கு தடைசெய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், மேற்படி நபர் ஆவரங்கால் சந்தியில் வீதியோரத்தில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளினை முச்சக்கரவண்டியினால் சனிக்கிழமை (12) இடித்து வீழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, குறித்த நபர் மதுபோதையில் முச்சக்கரவண்டி செலுத்தி வந்தமை தெரியவந்ததுடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரம் ஏற்கனவே நீதிமன்றத்தினால் தடைசெய்யப்பட்டு இருந்தமையும் தெரியவந்தது.

இதனையடுத்து, குறித்த நபரைக் கைதுசெய்த பொலிஸார், முச்சக்கரவண்டியினையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .