2025 ஜூலை 05, சனிக்கிழமை

மதுபானம் விற்பனை: இரண்டு பெண்கள் கைது

Kogilavani   / 2014 ஜூலை 13 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சட்டத்திற்கு முரணாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட இரு பெண்களை சனிக்கிழமை (12) மாலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தனர்.

தாவடி மற்றும் மயிலங்காடு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்த 2 மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாரிற்குக் கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் இரண்டு பெண்களையும் அவர்களது வீட்டில் மதுபானம் விற்பனை செய்துகொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .