2025 ஜூலை 05, சனிக்கிழமை

தண்ணீருக்கான உரிமைப் போராட்டம்

Kogilavani   / 2014 ஜூலை 13 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், யோ.வித்தியா, பொ.சோபிகா
இரணைமடுக் குடிநீர்த் திட்டத்திறற்கான 48 மில்லியன் ரூபாய் நிதி திரும்பிச் செல்வதினைத் தடுக்கக்கோரி, தண்ணீருக்கான உரிமைப்  போhராட்டத்தினை எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக முற்போக்குத் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த் தெரிவித்தார்.

முற்போக்குத் தமிழ்த் தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (13) கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான குடிநீர்த் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால் அதற்காக முதலிடு செய்யப்பட்டிருந்த 48 மில்லியன் ரூபா நிதி திரும்பிச் செல்லவுள்ளது.

 இந்நிலையில் மேற்படி நிதி திரும்பிச் செல்லாமலிருக்க வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

  மேலும், ஜனாதிபதியினூடாகவும் நீதிமன்றத்தினூடாகவும் நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான முதற்கட்டமாகவே, எதிர்வரும் 17 ஆம் திகதி போராட்;டமொன்று முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .