2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மாணவியை தொந்தரவு செய்த தந்தையின் நண்பருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஜூலை 14 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறைப் பகுதியைச் சேர்நத 17 வயது பாடசாலை மாணவியொருவருக்கு தொந்தரவு செய்துவந்த காரைநகர், மருதபுலத்தைச் சேர்ந்த 35 வயது சந்தேகநபரை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டார்.

மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் ஊர்காவற்றுறைப் பொலிஸாரினால் சனிக்கிழமை (12) கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேகநபரை, நீதவானின் வாசஸ்தலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) ஆஜர்ப்படுத்திய போதே, நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையுடைய நண்பரெனவும் கடந்த ஒரு சில மாதங்களாக அவர், மேற்படி மாணவியை திருமணம் செய்யும்படி  தொந்தரவு செய்து வந்துள்ளார் எனவும் மாணவியின் பெற்றோர், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து நீதவான் முன்னிப்லையில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனையடுத்தே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X