2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஜனாதிபதியை வடக்கு மக்கள் நம்பமாட்டார்கள்: சர்வேஸ்வரன்

Menaka Mookandi   / 2014 ஜூலை 15 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வடமாகாண மக்கள் இனியொரு காலமும் நம்பமாட்டார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பமாகியது.

இதன்போது, வடமாகாண ஆளுநராக மீண்டும் ஜி.ஏ.சந்திரசிறி நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பல கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், கருத்து தெரிவிக்கும் போதே சர்வேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை அலட்சியம் செய்யும் வகையிலேயே வட மாகாண ஆளுநர் நியமனம் இடம்பெற்றுள்ளது' என்றார்.

மேலும், 'முதலமைச்சரின் பல கோரிக்கைகளை ஜனாதிபதி கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இராணுவ பின்புலமுள்ள ஆளுநரை மாற்றி சிவில் சார்ந்தவரை ஆளுநராக நியமிக்கும்படி முதலமைச்சர் கோரிக்கைகளை  முன்வைத்திருந்தார்.

எனினும் அந்தக் கோரிக்கைகளை, ஜனாதிபதி அலட்சியம் செய்து வடமாகாண மக்களை இழிவுபடுத்தியுள்ளார்' என சர்வேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .