2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

முதிரை மரக்குற்றிகளை கடத்தியவர் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 15 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பாரவூர்தியொன்றில் 3 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகளைக் கடத்திச் சென்ற புத்தூரினைச் சேர்ந்த சந்தேகநபரினை உடுப்பிட்டிப் பகுதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை (14) இரவு கைது செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து உடுப்பிட்டிப் பகுதிக்கு மேற்படி முதிரை மரக்குற்றிகளைக் கடத்திச் செல்கையிலே வீதிப் போக்குவரத்துக் கடமையிலீடுபட்ட பொலிஸார் அவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் ரக வாகனமொன்றில் மணல் ஏற்றிச் சென்ற சுன்னாகம் பகுதியினைச் சேர்ந்த 23 வயதுடைய நபரையும் உடுப்பிட்டிப் பகுதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை (14) இரவு கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மணற்காட்டுப் பகுதியிலிருந்து சுன்னாகத்திற்கு மணல் ஏற்றிச் சென்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X