2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் மூவர் கஞ்சாவுடன் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 16 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இந்திய மீனவர்கள் மூவரை 17 கிலோ கஞ்சாவுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (15) கைது செய்துள்ள கடற்படையினர், மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தமிழகம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த காளி மாரி (வயது 37), எஸ்.அலெக்ஸாண்டர்  (வயது 37) மற்றும் நாகப்பட்டிணத்தினைச் சேர்ந்த நிசாந் குமேரேஸ் (வயது 19) ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பினை நோக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்று செவ்வாய்க்கிழமை (15) வந்துகொண்டிருந்த படகினை கடற்படையினர் இடைமறித்து அதில் பயணித்தவர்களிடம் விசாரணை செய்துள்ளனர்.

அத்துடன், அப்படகை சோதனையிட்ட போது, அதிலிருந்து 17 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்படி மூவரையும் கைது செய்த கடற்படையினர் கஞ்சாவினையும் மீட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X