2025 ஜூலை 05, சனிக்கிழமை

உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்தவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்: திருவாகரன்

Menaka Mookandi   / 2014 ஜூலை 16 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், பொ.சோபிகா, யோ.வித்தியா

இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை (மாகாண, பிரதேச, நகர சபைகளை) சேர்ந்தவர்கள் கொள்ளை, கொலை மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக வடமாகாண உள்ளூராட்சிச் செயலாளர் எஸ்.திருவாகரன் தெரிவித்தார்.

தேசிய அபிவிருத்திக்காக உள்ளூராட்சியை வலுப்படுத்தல் என்ற தொனிப்பொருளிலான வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு, யாழ். ரில்கோ சிற்றிக் ஹோட்டலில் இன்று புதன்கிழமை (16) இடம்பெற்றது.

பொதுநலவாய உள்ளூராட்சி மன்ற இணையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்தவர்கள் செய்யும் சமூகவிரோதச் செயற்பாடுகள் காரணமாகவே அவர்களை பொதுமக்கள் வெறுக்கின்றனர்' என்றும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .