2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் மாநாடு

Thipaan   / 2014 ஜூலை 19 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சொர்ணகுமார் சொரூபன்


ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34ஆவது சிறப்பு மாநாடு, இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் இன்று (19) ஆரம்பமாகியது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில், ஆரம்பமாகிய இந்த மாநாட்டில் கட்சியைச் சேர்ந்த சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களன கந்தையா சர்வேஸ்வரன், எஸ்.சிவமோகன், துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்களும், கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டினைத் தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை (20), யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகளுடனான மாநாடு இடம்பெறவுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .