2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நீரின்மையால் பூநகரி மக்கள் அவதி

Super User   / 2014 ஜூலை 20 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி,பூநகரி பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வது நாளாந்தம் அதிகரித்துச் செல்வதாக பூநகரிப் பிரதேச செயலர் எஸ்.சத்தியசீலன் ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'பூநகரி பிரதேச மக்கள் வரட்சி காலங்களில் நீரில்லாமல் அவதிப்படுவது வழமையாக இடம்பெறுவதே. ஆனால் இவ்வருடம் நிலவும் தொடர் வரட்சியினால் இம்மக்களின் அன்றாட தேவைகளுக்கான நீருக்கும் பெரிதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இப் பிரதேசத்திலுள்ள பண்ணைகளில்; கால்நடைகளும் குடிநீர் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றது.

பூநகரிப் பிரதேச சபையினால் அம்மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகின்ற போதும், அது போதுமானதாகவில்லை.

இது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (18) பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலும் ஆராயப்பட்டது.  அந்தக்கூட்டத்தில் நீர்ப் பிரச்சினையினை தீர்ப்பதற்கு விரைவான திட்டமொன்றை மேற்கொள்ள வேண்டும் என பலதரப்பினாலும் வலியுறுத்தப்பட்டது' என பூநகரிப் பிரதேச செயலர் எஸ்.சத்தியசீலன் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .