2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பட்டம் விடும் திருவிழா

Super User   / 2014 ஜூலை 20 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    ற.றஜீவன்


சமூக ஒருங்கிணைப்பு வாரத்தையொட்டி தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்ட பட்டம்விடும் திருவிழா நேற்று சனிக்கிழமை (19) யாழ். தும்பளை கிழக்கு மூர்க்கம் கடற்கரையில் இடம்பெற்றது.

இந்தப் பட்டம் விடும் திருவிழாவினை யாழ். மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, பலவிதமான வடிவங்கள் மற்றும் வர்ணங்களில் அமைந்த பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

தொடர்ந்து, கலை கலாச்சாரத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் ரூபினி வரதலிங்கம், தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் பிரதிநிதிகள், கரவெட்டி, பருத்தித்துறை பிரதேச செயலர்கள், இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேற்படி திருவிழா நாடு முழுவதிலும் நேற்று சனிக்கிழமை (19) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .