2025 ஜூலை 07, திங்கட்கிழமை

திருட்டு மாட்டிறைச்சியுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., கொடிகாமம், விடத்தல்பளைப் பகுதியில் திருடிய மாடொன்றினை இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் தலா 1 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் நேற்று வியாழக்கிழமை (24) உத்தரவிட்டார்.

மேற்படி 4 சந்தேகநபர்களும் தாங்கள் குற்றமற்றவர்கள் என மன்றில் தெரிவித்ததையடுத்து, அவர்களுக்கு நீதவான் பிணை கொடுத்ததுடன் இந்த வழக்கை னை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

அத்துடன், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 30 கிலோ இறைச்சியினையும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் மற்றும் நீதிமன்ற உத்தியோகஸ்தர்கள் முன்னிலையில் புதைக்கும்படியும் கொடிகாமம் பொலிஸாரிற்கு நீதவான் உத்தரவிட்டார்.

கொட்டடி, ஐந்து சந்தி, பழம்வீதி ஆகிய இடங்களைச் சேர்ந்த 18, 19, 22, மற்றும் 25 வயதுடைய நான்கு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேற்படி சந்தேகநபர்கள், விடத்தல்பளைப் பகுதியில் மேய்ச்சலுக்கு நின்றிருந்த மாட்டினை திருடி அதனை அப்பகுதியிலுள்ள வயல் வெளியில் வைத்து இறைச்சியாக்கிக் கொண்டு செல்லும் போது கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .