2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'யாழ்ப்பாண நினைவுகள்' நூல் வெளியீடு

Menaka Mookandi   / 2014 ஜூலை 28 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன், எஸ்.குகன்


கைதடி சிவகாமி பதிப்பகத்தினால் தொகுக்கப்பட்ட வேதநாயகம் தபேந்திரனினால் 'யாழ்ப்பாண நினைவுகள்' என்ற தலைப்பில் தொடராக எழுதப்பட்ட 30 கட்டுரைகள் உள்ளடங்கிய நூல் வெளியீட்டு விழா இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (27) வெளியிடப்பட்டது.

அரசாங்க பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் உடுவை எஸ்.தில்லை நடராஜா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நூலிற்கான வாழ்த்துரைகளை வட மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களப் பணிப்பாளர் நா.இராசநாயகம், வட மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ், கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் ஆகியோரும் வழங்கினார்கள்.

நூலின் முதற் பிரதியை சுவிட்சிலாந்து நாட்டிலிருந்து வருகை தந்த வேல்நாதன் கோசலா தம்பதிகள் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

நூலின் மதிப்பீட்டு உரையை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளர் ச.லலீசன் நிகழ்த்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .