2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இளைஞர் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். தொண்டமனாறு மயிலணிப் பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத 04 பேர் அப்பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் ரமணன் (வயது 26) என்பவர் மீது   வியாழக்கிழமை (07) இரவு மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் வெள்ளிக்கிழமை (08) தெரிவித்தனர்.

இவரது வீட்டுக்கு  அருகிலேயே  இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதில் படுகாயமடைந்த இவர் முதலில் ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதன் பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்  பொலிஸார்  தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X