2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீட்டில் கொள்ளையடித்த சந்தேகத்தில் இருவர் கைது

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.சாவகச்சேரி, கச்சாய் தெற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் சனிக்கிழமை (09) அதிகாலை உட்புகுந்து அங்கிருந்த இரு பெண்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் தொலைபேசிகளைக் கொள்ளையிட்டுச் சென்ற இரு சந்தேகநபர்களை சனிக்கிழமை (09) மாலை கைது செய்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

3 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் தொலைபேசிகளே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டன. சம்பவத்தில் காயமடைந்த இரு பெண்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, மோப்பநாயின் உதவியுடன் அல்லாரை, வெல்லம்போக்கட்டியினைச் சேர்ந்த 21 வயது சந்தேகநபரும் கொடிகாமத்தினைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டனர்.

மேற்படி இரு சந்தேகநபர்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .