2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுயதொழில் நிதி நன்கொடை கையளிப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால், கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 13 வறிய குடும்பங்களுக்கு சுயதொழில் நிதி நன்கொடை வழங்குவதற்கான நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் கோபாலப்பிள்ளை நாகேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (17) தெரிவித்தார்.

ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா 7500 ரூபா வீதம் வழங்குவதற்கென 97,500 ரூபா நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வறிய நிலையிலுள்ள பெண்களை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ள குடும்பங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு இதற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆடு, மாடு வளர்ப்பு, சிறு வியாபாரம், சிறு கைத்தொழில் போன்ற தொழில் முயற்சிகளை பயனாளிகள் மேற்கொள்ளவுள்ளனர். இந்நிதி எதிர்வரும் வாரத்தில் பயனாளிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர்  தெரிவித்தார்.

அத்துடன், இந்நிதியைக் கொண்டு பயனாளிகள் மேற்கொள்ளும் சுயதொழில் முன்னேற்றத்தினை அளவிட்டு இரண்டாம் கட்டமாகவும் தலா 7,500 ரூபா வீதம் சமூக சேவைகள் திணைக்களத்தில் இருந்து பெற்றுக்கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .