2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சிறுபான்மையினர் ஒன்றிணைய வேண்டிய காலமிது: சேகுதாவூத்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை இனத்தவர்களாகிய தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் மலைநாட்டுத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டிய காலமிது. பொது செயற்றிட்டத்தின் கீழ் இணையாது விட்டால், நாம் பேரம் பேசும் சக்தியை இழப்பதுடன் இன்னும் 30 வருடங்கள் பின்நோக்கி செல்லும் நிலைமைக்கே தள்ளப்படுவோம் என உற்பத்தித் திறன் அபிவிருத்தி அமைச்சர் பஷPர் சோகுதாவூத் சனிக்கிழமை (16) தெரிவித்தார்.

யாழ்.கிறீன்கிறாஸ் விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை (16) இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அரசுகள் மாறலாம். அரசாங்கங்கள் மாறலாம். ஆனால் சிங்கள பேரினவாத நடவடிக்;கைகள்  குறையப் போவதும் இல்லை. மாறப்போவதும் இல்லை. இத்தகைய நிலைமையில் சிறுபான்மை இனங்கள் ஒரு பொதுக்கொள்கையின் அடிப்படையில் ஒன்றுசேர வேண்டிய அவசியமும் காலகட்டமும் இதுவாகும்' என்று அவர் கூறினார்.

'குறிப்பாக, தமிழ் மக்களுடைய அரசியல் பலத்தைப்பெற்ற அரசியல் கட்சிகளும், முஸ்லீம் மக்களின் பலத்தைப் பெற்ற அரசியல் கட்சிகளும் மற்றும் மலை நாட்டு அரசியற் கட்சிகளும் இணைய வேண்டும். 

கடந்த 32 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்துள்ளது. எதிரே வரும் தடைகளை தாண்டவேண்டிய தேவையும் அவசியமும் சிறுபான்மை இனங்களுக்கு இன்று காணப்படுகின்றன. சிறுபான்மையினம் பிரிந்து நின்று கொண்டு எதனையும் சாதித்துவிட முடியாது' என அவர் கூறினார்.

'கடந்த காலங்களில் சிறுபான்மை இனங்கள் விட்ட தவறுகளை எதிர்காலத்திலும் நிவர்த்தி செய்ய வேண்டிய தேவையுள்ளது. மூன்று சிறுபான்மை இனங்களும் இணைவது என்பது புதிய சிந்தனையில் இடம்பெறும் ஆக்கபூர்வமான செயற்பாடாக அமையமுடியும்.

இந்த நிலைப்பாட்டைக் கொண்டுவரும் சக்தியும் ஆற்றலும் கட்சிகளுக்கே உண்டு. நான் ஒரு அமைச்சராக இருந்தாலும்கூட சிறுபான்மை இனத்தில் இருந்தே அமைச்சராக வந்தேன்.

சிறுபான்மையின மக்கள் ஒன்றிணைவதன் மூலம் வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் சிறுபான்மையின மக்களும் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்ற ஒரு கருத்தும் கூட முன்வைக்கப்படுகின்றது. ஆனால் இன்றும்கூட அந்த மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் சில தவறுகள் பிழைகள் எற்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் மாகாண சபை அமைக்கும் போதும் பிழைகள், தவறுகள் ஏற்பட்டுள்ளன. நான் அதனை ஒத்துக் கொள்கின்றேன்.

சிறுபான்மை இனங்கள் இணைந்து கொள்வதன் மூலம், இலங்கையின் ஜனாதிபதியையோ அல்லது நாடாளுமன்றத்தையோ தீர்மானிக்கும் ஆற்றல்கொண்ட சக்தியாக எதிர்காலத்தில் மாறலாம்' என பஷீர் சேகுதாவூத் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .