2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போத்தலால் குத்தியதில் இருவர் படுகாயம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, வடலியடைப்புப் பகுதியில் போத்தலால் குத்தப்பட்டு இருவர் படுகாயமடைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (17) இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக இளவாலை பொலிஸார் திங்கட்கிழமை (18) தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த மு.நகுலேஸ்வரன் (வயது 35), என்.செந்தூரன் (வயது 27) ஆகிய இருவருமே படுகாயமடைந்தார்கள்.

உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றியதிலேயே, மேற்படி இருவரும் போத்தலால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .