2025 ஜூலை 09, புதன்கிழமை

இருவர் மீது தாக்குதல்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 18 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்
 
யாழ். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கும்பலொன்றின் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் படுகாமயடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இன்று திங்கட்கிழமை (18) அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
அதேயிடத்தைச் சேர்ந்த எஸ்.சசிகரன் (வயது 28), குமாரசாமி தீபராஜ் (வயது 36) ஆகிய இருவருமே படுகாயமடைந்து, பருத்தித்துறை மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
படுகாயமடைந்தவர்களில் ஒருவரான தீபராஜ், மாலுசந்தி பலநோக்குக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றுபவர் என்றும், அவரை மேற்படி கும்பல் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க வாயிலில் வைத்துத் தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸார் கூறினார்கள்.
 
அத்துடன் சசிகரனை, அத்தாய்ப் பகுதியில் வைத்து மேற்படி குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
 
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .