2025 ஜூலை 09, புதன்கிழமை

மாநகர சபை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

George   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் உள்நுழைவதற்கு விசேட அடையாள அட்டைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்வதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா புதன்கிழமை (20) தெரிவித்தார்.

யாழ் மாநகர சபையின் விசேட கூட்டம் மாநகர சபைக் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்றது.

இதன்போது, தற்போது வைத்தியசாலைக்குள் செல்வதற்கு நுழைவு அனுமதி அட்;டை (பாஸ்) நடைமுறை உள்ளது.

இந்நிலையில், மாநகர உறுப்பினர்கள் வைத்தியசாலைக்குச் சென்று, மாநகர சபை உறுப்பினர்கள் என தெரியப்படுத்தும் போதும், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தம்மை அனுமதிக்க மறுக்கின்றனர் என மாநகர சபை உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரியப்படுத்தினர்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக சகல தரவுகளையும் அனுப்பி வைக்கும்படியும் கூறினார்.

அத்துடன், யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரு நோயாளிக்கு முன்னர் 2 அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டு வந்ததாகவும், ஆனால் தற்போது 3 அனுமதி அட்;டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .