2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விடுதலையானவர் மீண்டும் கைது

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

குழு மோதலுக்கு தயாரான நிலையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டவர், மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரை வாளால் வெட்டிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் நேற்று திங்கட்கிழமை இரவு (25) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், அல்வாய் வடக்கு, மகாத்மா வீதியில் குழு மோதலுக்குத் தயாரான நிலையில் வாளுடன் நின்றிருந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (24) இரவு, பருத்தித்துறை பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், மேற்படி சந்தேகநபர் பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் திங்கட்கிழமை (25) மாலை ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதன்போது, நீதவான் வாள் வைத்திருந்த குற்றத்திற்காக 50 ரூபாய் தண்டம் விதித்துத் தீர்ப்பளித்துடன் எச்சரிக்கையும் செய்தார்.

தொடர்ந்து மேற்படி நபர், அல்வாய் வடக்கு, மகாத்மா வீதியில் வைத்து இருவரை வாளால் வெட்டியுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, மேற்படி நபரை பருத்தித்துறை பொலிஸார் மீண்டும் செவ்வாய்க்கிழமை (26) கைது செய்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .