2025 ஜூலை 12, சனிக்கிழமை

மானிப்பாய் இந்து கல்லூரிக்கு புதிய கட்டடம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


மானிப்பாய் இந்து கல்லூரிக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு மாடிக்கட்டிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக கல்லூரி அதிபர் எஸ்.சிவனேஸ்வரன் செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார்.

கல்லூரியின் பழைய மாணவர் சிறிரஞ்சன் நடேசன் தனது தந்தையின் நினைவாக இந்த இரண்டு மாடி கட்டிடங்களை அமைத்து கல்லூரிக்கு தரவுள்ளதாக அதிபர் தெரிவித்தார்.

ஒவ்வொரு தளத்திலும் தலா 6 வகுப்பறைகளுடன் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்வுள்ளது. 60 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்டதாக நவீன வசதிகள் கொண்டமைந்ததாக இந்த கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டுவிழா திங்கட்கிழமை (08) இடம்பெற்றதாகவும், அடிக்கல்லை கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் எஸ்.விவேகானந்தராஜா நாட்டி வைத்ததாகவும் அதிபர் குறிப்பிட்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .