2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற ஐவர் கைது

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நெல்லியடி, வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவு பகுதிகளில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் திங்கட்கிழமை (15) இரவு ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் மின்சார சபையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே சட்டவிரோத மின்சாரம் பெற்றவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

நெல்லியடி பொலிஸ் பிரிவு பகுதிகளில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற இருவரும்இ வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவு பகுதிகளில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மின்மானிக்குள் கம்பி வைத்தமை மற்றும் திருட்டு மின்சாரம் பெற்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களிலேயே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .