2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வேலையற்ற இளைஞர், யுவதிகளை பதிவு செய்யுமாறு கோரிக்கை

George   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


யாழ். மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் இளைஞர், யுவதிகள் அவர்கள் வசிக்கும் பிரதேச செயலகங்களில் கடமைபுரிகின்ற மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் பதிவுகளை மேற்கொள்ளுமாறு, யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், செவ்வாய்க்கிழமை(16) தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் தொழிற்சந்தை நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் நடைபெறவுள்ளது.

இந்த தொழிற்சந்தை நிகழ்வில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காகவே பதிவுகள் மேற்கொள்ளுமாறு கேட்கப்படுவதுடன், பதிவுகளை மேற்கொள்வோர் இம்மாத இறுதிக்குள் தங்கள் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், முன்னர் பதிவு செய்து, இதுவரையில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளாதவர்களும் தங்கள் பதிவுகளை புதுப்பித்துக்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .