2025 ஜூலை 12, சனிக்கிழமை

விழிப்புணர்வு கலந்துரையாடல்

George   / 2014 செப்டெம்பர் 16 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகாஇ நா.நவரத்தினராசா

உற்பத்தித் திறன் அமைச்சும் வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகமும் இணைந்து நடத்திய உற்பத்தித் திறன் அதிகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் யாழ். பொது நூலகத்தில் செவ்வாய்க்கிழமை(16) நடைபெற்றது.

வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், உற்பத்திகளின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு எவ்வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடியும் என அலுவலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில், உற்பத்தித் திறன் அமைச்சின் செயலாளர் உபாலி மராசிங்ஹே கருத்துரைகளை வழங்கினார்கள்.

இந்த கலந்துரையாடலில், வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த மாகாண திணைக்களங்களின் தலைவர்கள் செயலாளர்கள், மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .